Thursday, October 22, 2009

மனதிற்கு பிடித்தவை






என் மனதிற்கு

எது மிகவும் பிடிக்கும்

என்று கேட்டால்...

அது நீ என்னுடன்

பேசிய வார்த்தைகள் என்பேண்.



உலகத்திலேயே

எது மிகவும் பிடித்தது என்றால்

உந்தன் நகைப்பும்

அன்பும் என்று கூறுவேன்



எனக்கு இதை விட

எதுவும் சொல்ல

தெரியவில்லை பெண்ணே !!!



ஏனெனில் நான்

உன் மீது

காதல்வசப்பட்டு விட்டேன்

என்று நினைக்கின்றேன்.…


                                                                                            ராகவன்

தீபாவளி


தீபாவளி


அதிகாலை......

அம்மாவின் அதட்டல்

இன்றாவது வேளைக்கே

எழுந்திறேன்டி



என்னம்மா நீ கொஞ்ச நேரம்

விட மாட்டேன் என்கின்றாய்

என புழம்பிக் கொண்டே

எழுந்தாள் தீபிகா



எண்ணை குளியல்

ஏற்றதான பட்டாடை

உடுத்தி வந்து

தீபமேற்றி நின்றவளை

என் கண்ணே பட்டுவிடும் என

சுற்றிப் போடும் அன்னை



குடும்பத்தோடு ஒன்றாக

ஆலயம் சென்று

ஆண்டவனை மன்றாடி

மன திருப்தியோடு

வீட்டை அடைந்தனர்



அப்பா.....

அவள் உணர்வுகளுக்கு

உயிர் கொடுக்கும்

தெய்வத்தின் மறு உரு

விழுந்து வணங்குகின்றாள்



கைவிஷேடம் பெறத்தானென

கேளி செய்த தம்பியை

உண்டு இல்லையென

பண்ணிவிட்டாள்

அவளுக்கு தெரிந்த மொழிகளில்



உற்றார் உறவினர்

நண்பர்கள் கூடி

பகிர்ந்தளித்து பகிர்ந்துண்ட

பலகாரங்கள்



பக்கத்து வீட்டு அஞ்சலியை

அழைத்துக் கொண்டு

முன் வீட்டு அகிலா தொடக்கம்

எதிர் தெரு கவிதா வரை

சந்தித்து வாழ்த்தி திரும்பினாள்



காதை கிழிக்கும் சத்தத்தோடு

பட்டாசுகள்

கலர் கலர் வாண வேடிக்கைகள்

கோடி இன்பம் தந்து சென்றது



பட்டாம் பூச்சியாய்

சிறகடித்தது அவள் மனது

என்றுமே இந்த இன்பம்

வேண்டுமென பிரார்த்தித்தாள்

தன்னை அறியாமல்



யாரோ தன்னை தீண்டும் உணர்வு

திடுக்கிட்டு “அம்மா” என

அலறி எழுந்தவளுக்கு

ஒரு நிமிடம் ஒன்றுமே

புரியவில்லை



சில நிமிடங்களில் தான்

தன்னை உணர்ந்து

பழைய நிலைக்கு வந்தாள்



பக்கத்து முகாம் பவானி தான்

அவளை எழுப்பியது

உன் குடும்பத்தை பற்றி

கனவு ஏதும் கண்டாயா?

கேட்டவள் பவானி தான்



”ம்ம்” என்பதை தவிர

வார்த்தைகள் வர மறுத்தன



என்னவென்று வார்த்தை வரும்

அவள் அத்தனை உறவுகளையும்

தொலைத்து அனாதையாய்

நிற்கும் போது......?



கடவுளே எதற்காக

இத்தனை கொடுமைகள்

எம் இனத்திற்கு

கடவுளிடம் நொந்து

கொள்கின்றாள்

கண்ணீர் அருவியானது.



அதே பிரார்த்தனை தானே

நம் ஒவ்வொருவருக்குள்ளும்

மீண்டும் மீண்டும் பிரார்த்திப்போம்

எம்மினம் காத்தருளும் படி

இனியொரு மரணதேசம்

வேண்டாமென

தமிழருக்கான தேசம் கொடு

அதில் தமிழர் எம்மை வாழவிடு என




ஜோ. அமிகீர்த்தி



மைக்கேல் ஜாக்சன் கையுறை ரூ.30 லட்சத்துக்கு ஏலம்


பாப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் திடீர் மரணத்தால் அவருடைய புகழ் அதிகரித்து உள்ளது. அவர் பயன்படுத்திய பொருட்களை அவருடைய நினைவாக வைத்துக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.




இதனால் அவர் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விட்டு அதிக விலைக்கு விற்று வருகின்றனர். மைக்கேல் ஜாக்சன் 1984-ம் ஆண்டு �வெற்றி பயணம்� என்ற பெயரில் உலக சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தினார்.



அப்போது வித்தியாசமான கையுறை அணிந்து நடனம் ஆடினார். இந்த கையுறையில் 50 கியூ விளக்குகள் பொருத்தப்பட்டு �எம்பி ராய்டரி� மூலம் தைக்கப்பட்டு இருந்தன.



இது லண்டன் ஏல நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டது. இதை ரூ.30 லட்சத்துக்கு ஒருவர் ஏலம் ஏடுத்து உள்ளார். மைக்கேல் ஜாக்சனின் மஞ்சள் கலர் சட்டை ஒன்று ஏற்கனவே ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 21, 2009

உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு

உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது.





வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.



ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்,



"உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.



உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.



தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும்.



உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.



உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.



சோமாலியாவில், வன்முறையும், உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.



கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.



பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.



ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது.



கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.



உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது.



விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது.



1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.



உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.



உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்" என்றார்.

கப்பலில் உலகை சுற்றப் புறப்பட்ட 16 வயது சிறுமி


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஜெஸிகா வாட்சன் (படம்), சிறிய கப்பலில் உலகை சுற்றுவதற்கான தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.



சிட்னி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஜெஸிகாவுக்கு அந்நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.




ஜெஸிகாவின் நண்பர்களும், உறவினர்களும் நேரில் வந்து வாழ்த்துகளை தெரிவித்து அவரை வழியனுப்பி வைத்தனர்.







கடல்வழியாக 8-மாதத்தில் உலகை சுற்றப் புறப்பட்டுள்ள ஜெஸிகாவின் கப்பலைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பாக சிறிய படகுகளில் சிலர் செல்கின்றனர்.



11-வயது முதலே உலகை சுற்ற வேண்டும் என்ற லட்சியக் கனவுகளை சுமந்துள்ள ஜெஸிகா, வெற்றிகரமாகத் தனது பயணத்தை முடித்துவிட்டால் அவரது கனவு நனவாகிவிடும். உலகை கடல் வழியாகச் சுற்றி வந்த முதல் சிறுமி என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துவிடும். அவரது கனவு நனவாகவும், லட்சியம் நிறைவேறவும் நாமும் வாழ்த்துவோமாக!.








14 வயதில் கைதான தமிழ்ச் சிறுவன் 15 வருடங்களாகத் தடுத்து வைப்பு

14 வயதில் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் எவ்வித வழக்கு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படா மல் கடந்த 15 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று சுதந் திரத்திற்கான மக்கள் மேடை எனும் அமைப்பு திடுக்கிடும் தகவல் அறிவித்துள்ளது.



பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசி யற்கைதிகளையும் 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகத் தையும் சந்திப்பதற்கு இந்த அமைப்பு சிறைச் சாலைகளுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தது.



அப்போதே 14 வயதில் சிறுவனாக கைதானவரை 29 வயது இளைஞராக அங்கு சந்தித்தது என அந்த அமைப்பு அறி வித்துள்ளது.

Tuesday, October 13, 2009